டிரம்ப் - கிம் பிப்ரவரி 27, 28 தேதிகளில் வியட்னாமில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இம்மாதக் கடைசியில் இரண்டாவது உச்சநிலை சந்திப்பை நடத்தவுள்ளனர். வியட்னாமில் பிப்ரவரி 27-28 தேதிகளில் கிம் ஜோங்கைச் சந்திக்கவுள்ளதாக நேற்று தமது அதிபரின் ஆண்டு உரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 அமெரிக்கா - வடகொரியத் தலைவர்களுக்கிடையே கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல்  சந்திப்பைத் தொடர்ந்து இரண்டா வது சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், வியட்னாமில் எந்த இடம் என டிரம்ப் கூறவில்லை.
“எங்களது துணிச்சலான புதிய அரசதந்திர உறவுகள் மூலம் கொரியத் தீபகற்பத்தில் அமைதி ஏற்பட எங்களால் தொடர்ந்து செயல்பட முடிகிறது. அமெரிக்க பிணைக்கைதிகள் நாடு திரும்பி விட்டனர். அணுவாயுதச் சோதனை கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 15 மாதங்களில் ஓர் ஏவுகணை கூட செலுத்தப்படவில்லை.
“நான் மட்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்காவிட்டால் இந்நேரம் அமெரிக் காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே மிகப் பெரிய போர் மூண்டிருக்கும்,” என்றார் டிரம்ப்.
“இன்னும் செய்யப்பட வேண்டி யவை பல உள்ளன. ஆனால், கிம் ஜோங்-உன்னுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது’’ என்று அவர் மேலும் கூறினார்.
‘உன்னதத்தை தேர்வு செய்தல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்க ளுக்கு ஆற்றிய உரையில், தமது அரசாங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டதுடன் எல்லைச் சுவர் கட்டுவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்திப் பேசினார் டிரம்ப். அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை நாடாளுமன் றம் மறுத்ததையடுத்து அமெரிக்கா வில் அரசாங்கம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு  முடக்கப்பட்டது. 
அமெரிக்கா வலுவான வளர்ச் சிப் பாதையில் செல்வதாகக் கூறிய டிரம்ப், அமெரிக்கா அடையக்கூடிய வளத்தை எட்டுவதற்கு பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அரசியல் முறையை மாற்றி, ஒத்துழைக்குமாறும் புதிய எதிர்காலத்தை உருவாக்குமாறும் ஜனநாயகக் கட்சி யினருக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்