துருக்கியில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது இருவர் பலி

துருக்கியில் இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது இருவர் பலி

1 mins read
758d2e8d-6f0d-41b7-b3c5-8c3152bc3cd8
கட்டட சிதைவுகளுக்கிடையே சிக்கிக்கொண்டோரைத் தேடும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. (படம்: இபிஏ) -

துருக்கியின் தலைநகரில் எட்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் அறுவர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் நகரின் கர்தல் மாவட்டத்தில் அமைந்திருந்த அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இருந்தபோதும், கட்டடத்தின் மூன்று மேல்மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக இஸ்தான்புல் நகரின் ஆளுநர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்துகொண்டிருப்பதாகவும் திரு யெர்லிகாயா கூறினார்.