தென்கொரியாவில் பெண்களுக்கு மட்டுமான டாக்சி சேவை சோதனை

பெண்கள் மட்டும் பயன்படுத்துவதற்கான டாக்சி சேவை  தென்கொரிய தலைநகர் சோலில் இம்மாதம் சோதிக்கப்படும் என்று நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘டாகோ சொலியூஷன்ஸ்’ என்ற டாக்சி நிறுவனம், பெண்களுக்கான ‘வெய்கோ லேடி’ சேவையைச் சோதிக்க உள்ளது.

பெண் ஓட்டுநர்களை மட்டும் கொண்டுள்ள இந்தச் சேவையைப் பெண் பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும். குழந்தைகளுக்கான வசதியும் இங்கு உண்டு.

சோதனை முயற்சியில் இருபது ‘வெய்கோ லேடி’ டாக்சிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். அடுத்த ஆண்டுக்குள் இதனை 500 டாக்சிகளாக அதிகரிப்பதற்கான திட்டங்கள் உள்ளன.