இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது இருவர் மரணம்

இஸ்தான்புல்: துருக்கியில் எட்டு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் மரணமடைந்தனர். ஆறு பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படும் என்றும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கட்டடத்தில் 14 வீடுகள் இருந்ததாகவும் அவற்றில் மொத்தம் 43 பேர் குடியிருந்ததாகவும் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்ததாக இஸ்தான்புல் ஆளுநர் அலி யர்லிகாயா தெரிவித்தார். அந்தக் கட்டடத்தின் ஆக உயரத்தில் இருக்கும் மூன்று மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டவை என்று அவர் தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் துணிக் கடை ஒன்று உரிமம் இல்லாது செயல்பட்டு வந்ததாக ஆளுநர் கூறினார். இடிபாடுகளிலிருந்து குறைந்தது மூன்று பேரை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்