மணிலா: பிலிப்பீன்சில் தட்டம்மைத் தொற்று காரணமாக 22 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை நேற்று அறி வித்தது. 2017ஆம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய டெங்கி தடுப்பூசி திட்டம் பொது மக்களை அச்சம் கொள்ள வைத் ததாகவும் அதன் காரணமாக தட்டம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை சிறார் பலர் போட்டுக்கொள்ளவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஃபிரான்சிஸ் டுக்கே தெரிவித்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி மணிலாவில் 441 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந் ததாக சுகாதாரத் துறை கூறியது. கடந்த ஆண்டில் 36 பேர் மட்டுமே தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருந் தனர். இந்நிலையில், மத்திய, தென் லுசோன் மற்றும் மத்திய, மேற்கு விசாயாஸ் ஆகிய பகுதிகளிலும் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டுள்ள தாக டாக்டர் டுக்கே தெரிவித்தார். "பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி களில் தட்டம்மைக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட வேண்டும். "இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குழந்தைகள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். தட்டம்மை பரவுவதை அந்தத் தடுப்பூசி தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார் டாக்டர் டுக்கே.
பிலிப்பீன்சில் தட்டம்மை தொற்று: 22 பேர் மரணம்
1 mins read
பாதிக்கப்பட்ட குழந்தைகள். படம்: இபிஏ -

