விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் முடங்கிய ‘சீனா ஏர்லைன்ஸ்’

தைவானில் ‘சீனா ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அந்நிறுவனம் 22 அனைத்துலக விமானப் பயணங்களை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தப் பிரச்சினையால் லாஸ் ஏஞ்சலிஸ், மணிலா, தோக்கியோ, ஹாங்காங், பேங்காக் ஆகிய இடங்களுக்குப் புறப்படவேண்டியிருந்த ‘சீனா ஏர்லைன்ஸ்’ விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சீனப் புத்தாண்டின்போது தொடங்கியதாகக் கூறப்படும் அந்த வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், விமானப் பணியாளர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘சீனா ஏர்லைன்ஸ்’ 76 விமானப் பயணங்களை ரத்து செய்யவேண்டியிருந்தது. 

Loading...
Load next