காற்பந்தாளர் சாலாவின் சடலம் மீட்பு

இங்கிலிஷ் நீரிணையில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் சிதைவுகளுக்கு இடையே ‘கார்டிஃப் சிட்டி’ காற்பந்து குழுவைச் சேர்ந்த விளையாட்டாளர் இமிலியானோ சாலாவின் உடல் மீட்டெடுக்கப்பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் நன்டேஸ் நகரிலிருந்து பிரிட்டனின் வேல்ஸ் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்றில் அர்ஜன்டினாவைச் சேர்ந்த 28 வயது சாலா பயணம் செய்தார். அந்த விமானம் ஜனவரி 21ஆம் தேதி பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நீரிணைக்கு அருகே மாயமானதாக அப்போது தகவல் வெளிவந்தது. விமானத்தின் சிதைவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன.

உயிரிழந்த சாலாவுக்குத் தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக போலிசார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி