கம்போடிய சிறைகளில் 47 மலேசியர்கள்

கம்போடிய சிறைகளில் 47 மலேசியர்கள்

1 mins read
8f134c99-bcf4-4683-afec-77c600d4d28b
-

மனிதர்களைக் கடத்தும் கும்பல் ஒன்றுக்கு இலக்காகிய 47 மலேசியர்கள், கம்போடியாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக 'த ஸ்டார்' என்ற மலேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது. அந்த மலேசியர்களில் 44 பேர் சராவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சராவாக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு லேரி சுங் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் சட்டவிரோத இணையச் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் பேரில் கம்போடிய போலிசார் கைது செய்ததாகவும் உண்மையிலேயே அவர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் திரு சுங் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கம்போடியாவிலுள்ள மலேசிய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.