1.7 டன் போதைப்பொருள் பறிமுதல்

சிட்னி: ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள 1.7 டன் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பறிமுதல் செய்துள்ளதாக ஆஸ்திரேலிய, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் போதைப்பொருள் கடத்தலில் மெக்சிகோ, ஆஸ்திரேலிய கும்பல்களுக்கு இடையிலான தொடர்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒலிச் சாதனங்கள் வைக்கப் பட்டிருந்த இரு கப்பல் கொள்கலன்களில் அந்தப் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் மெல்பர்ன், சிட்னி நகரங்களில் அமெரிக்கர் இருவரும் ஆஸ்திரேலியர் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.