‘மீட்கப்பட்டது சாலாவின் உடல்தான்’

போர்ட்லேண்ட் (பிரிட்டன்): கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல் அர்ஜெண்டினா காற்பந்து வீரர் இம்மானுவல் சாலாவினுடையதுதான் என்பதை பிரிட்டிஷ் புலனாய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர். கார்டிஃப் சிட்டி காற்பந்துக் குழுவிற்காக அண்மையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 28 வயது சாலா, கடந்த மாதம் 21ஆம் தேதி பயணம் செய்த சிறு விமானம் கர்ன்சி அருகே மாயமானது.

Loading...
Load next