பெய்ஜிங்: சீனாவில் புத்தாண்டு நாள் இரவில் நிகழ்ந்த இரு வேறு வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் மாண்டு போயினர். ஷான்சி வட்டாரத்தில் லூ என்ற ஆடவர் தம் சகோதரரின் வீட்டுக்குத் தீ வைத்ததில் மூன்று குழந்தைகள் உட்பட எழுவர் உடல் கருகி உயிரிழந்தனர். பின் தன்னையே மாய்த்துக்கொள்ள முயன்ற லூவை போலிஸ் கைது செய்தது. அதே இரவில், தன் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட குவோ என்ற ஆடவர், அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகக் கண்ணில்பட்டோரை எல்லாம் கத்தியால் குத்தினார். கான்சு மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் நிகழ்ந்த இத்தாக்குதலில் எண்மர் மாண்டனர். குவோ கைது செய்யப்பட்டார்.
சீனா: கத்திக்குத்து, தீ வைப்புச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழப்பு
1 mins read

