நஜிப் மீது மீண்டும்   குற்றப்பத்திரிகை தாக்கல்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது அவரது மூன்று வங்கிக் கணக்குகளில் 47 மில்லியன் மலேசிய ரிங்கிட் பணம் கள்ளத்தனமாகச் சேர்க்கப் பட்டது தொடர்பான மூன்று குற் றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப் பட்டுள்ளன.
அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அகமது முன்பாக தம் மீதான அந்தக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது திரு நஜிப் அவற்றை மறுத்தார்.
ஜாலான் ராஜா சுலானில் உள்ள அம்இஸ்லாமிக் வங்கியில் உள்ள திரு நஜிப்பின் மூன்று கணக்கு களில் அந்தப் பணம் செலுத்தப் பட்டதாகவும் 2014 ஜூலை 8ஆம் தேதி இந்தக் குற்றச் செயல்கள் நிகழ்ந்ததாகவும் குற்றப் பத்திரிகை கூறுகிறது.
இந்த மூன்று குற்றச்சாட்டு களிலும் தனிநபர் உறுதிப்பத்திரம் வழங்க திரு நஜிப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் திரு மனோஜ் குருப்பும் திரு நஜிப் சார்பில் வழக்கறிஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லாவும் முன்னிலையாகினர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் திரு நஜிப் மீது இதே மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 
இருப்பினும், தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் தலைமை யிலான அரசாங்கத் தரப்பு வழக் கறிஞர் குழு அளித்த விண்ணப் பத்தை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி அந்த குற்றச் சாட்டுகளில் இருந்து திரு நஜிப்பை விடுவித்து இருந்தார். 
திரு நஜிப் சம்பந்தப்பட்ட அந்த மூன்று குற்றச்சாட்டுகள் மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த அரசாங்கத் தரப்பு விரும்ப வில்லை என்றும் அமர்வு நீதி மன்றத்தில் அவர் மீது மீண்டும் இதே குற்றச்சாட்டுகளைச் சுமத்த அனுமதிக்க வேண்டும் என்றும் திரு டோமி தாமஸ் அந்த விண் ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஊழல் மலிந்த அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி தொடர்பில் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை திரு நஜிப் எதிர்நோக்கியுள்ளார். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற வையும் அவற்றுள் அடங்கும்.
ஆனாலும், தாம் எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று திரு நஜிப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.