தாய்லாந்து மன்னரின் ஆணையை ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சி

தாய்லாந்தில் மார்ச் 24ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அந்நாட்டு இளவரசி உபோல் ரத்தனா ராஜகன்யா, 67, தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டபோதும் அன்று இரவே நிலைமை மாறிப்போனது.
இளவரசி உபோல்ரத்தனா பொதுத் தேர்தலில் போட்டியிட அவரின் சகோதரரும் நாட்டின் மன்னருமான வஜிரலொங்கோன் தடை விதித்துள்ளார்.
முன்னேப்போதும் இல்லாத வகையில், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் தாய்லாந்து தேர்தல் களம் பரபரப்பானது.
இந்த நிலையில், தம்முடைய சகோதரி பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பொருத்தமாக இராது என்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் கால்பதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் மன்னர் வஜிரலொங்கோன் நேற்று முன் தினம் அறிவித்தார்.
மன்னரின் இந்த ஆணையை ஏற்றுக்கொள்வதாக தாய் ரக்ஷா சார்ட் கட்சியும் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தது.
முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ரவுடன் தொடர்புடைய தாகக் கூறப்படும் அந்தக் கட்சி, “தேர்தல் ஆணையத்தின் விதி முறைகளுக்கும் தேர்தல் சட்டத் திற்கும் இணங்கி நடப்போம்,” என்றும் அறிவித்துள்ளது.
வழக்கமாக செஞ்சட்டைத் தலைவர்களால் நிரம்பி வழியும் தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் தலைமை அலுவலகம், இளவரசி தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.
கட்சித் தலைவர் பிரீச்சாபோல் பொங்பானிச்சும் மற்ற முக்கிய உறுப்பினர்களும் நேற்று அங்கு தலைகாட்டவில்லை.
பேங்காக்கில் நேற்று நடை பெறுவதாக இருந்த கட்சி நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் வேட்பாளராக முன்னர் அறிவிக்கப் பட்டபோதும் இளவரசி உபோல் ரத்தனா அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக அறிவிக்கப் படவில்லை.
இதற்கிடையே, தமது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தம்முடைய ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இள வரசி உபோல்ரத்தனா.
“மற்ற உலக நாடுகள் பார்த்து வியக்கும் வண்ணம் தாய்லாந்து முன்னேறிச் செல்வதையும் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் காண விரும்பு கிறேன்,” என்று இளவரசி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்