வழிந்தோடும் எரிமலைக் குழம்பு: கிராமவாசிகளுக்கு ஆபத்து

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுலாவேசியில் உள்ள கரான்கேடாங் எரிமலையிலிருந்து குழம்பு வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக எரிமலை அருகில் உள்ள சாலைகளும் பாலங்களும் புதையுண்டன.
எரிமலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வாழும் 500க்கும் மேற்பட்ட கிராமவாசி களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்தோனீசிய அதிகாரிகள் கவலை தெரி வித்துள்ளனர்.
மோசமான வானிலை மீட்புப் பணிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிட்டதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
இருப்பினும், கிராமவாசிகளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற இலக்குடன் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக வடசுலாவேசியின் இயற்கைப் பேரிடர் நிவாரண அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
வழிந்தோடும் எரிமலைக் குழம்பு சாலைகளைப் புதைத்து விட்டதால் கிராமங்களில் உள்ள வர்களால் சாலை வழியாக அப்பகுதியிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தை எதிர்நோக்கும் கிராமம் எரிமலையின் உச்சி யிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கப்பல் ஒன்றைப் பயன்படுத்தி கடல் வழியாகக் கிராமவாசிகளை அவ்விடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்ற அதிகாரிகள் தற்போது திட்டமிட்டு வருகின் றனர்.
ஆனால் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கப்பலால் துறை முகத்துக்கு அருகில்கூட செல்ல முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிக்காக அதிகாரிகள் தயாராகி வரும் வேளையில், ஆபத்து நெருங்குகிறது என்று தெரிந்தும் அந்தக் கிராமத்தில் இருக்கும் சிலர் தங்கள் வீடுகளையும் கால்நடைகளையும் விட்டு வர மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதால் இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!