கடும் பனிப்பொழிவு காரணமாக ஜப்பானில் விமானச் சேவை தாமதம்

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள ஹனீடா மற்றும் நரிட்டா விமான நிலையங்களில் விமானச் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணி அளவில் மொத்தம் 141 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மொத்தம் 20,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.