சிட்னியை உலுக்கிய புயல்; ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நகரமான சிட்னியைக் கடுமையான புயல் தாக்கியதில் நேற்று ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்தனர்.
புயல் காரணமாக நகரில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாகப் போக்குவரத்து கடு மையாகப் பாதிக்கப்பட்டது. சாலை களில் இருந்த வாகனங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து சேதப்படுத் தியது.
நேற்று முன்தினம் சிட்னியில் பல்வேறு பகுதிகளை இடி, மின்னலுடன் கூடிய புயல் உலுக்கியது.
சிட்னியின் மேற்குப் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பிரதான சாலைகளில் வெள்ளத்தில் மூழ்கிய கார்கள், உடைந்த போக்குவரத்து விளக் குகள், வேரோடு சாய்ந்த மரங்கள் ஆகியவற்றைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.
புயல் உச்சத்தில் இருந்தபோது மின்சாரமின்றி 40,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவுதியுற்றதாக எரிசக்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
நேற்று 5,000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவித்ததாக தெரிவிக்கப்பட்டது.
சிட்னி முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. உதவி கேட்டு ஏறத்தாழ 1,000 அழைப்புகள் கிடைத்தாக அதிகாரி கள் கூறினர்.
வெள்ளத்திலிருந்து வாகனங் களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டதாக நியூ சவுத் வேல்ஸ்  மாநிலத்தின் அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரி வித்தார்.
இது ஒரு புறம் இருக்க, சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவை தாமதம் ஏற்பட்டது.
அதுமட்டுமல்லாது, சிட்னியின்  சில ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக அறியப் படுகிறது.
கனமழை மற்றும் மின்னல் காரணமாக மகளிருக்கான ஆஸ்திரேலியக் காற்பந்து ஆட்டம் ஒன்று இருமுறை ஒத்திவைக்கப் பட்டது. ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விளை யாட்டரங்கத்தின் விளக்குக் கோபுரங்கள் செயலற்றுப் போயின.
போதிய வெளிச்சம் இல்லாத தால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு மாநிலமான குவீன்ஸ் லாந்தும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளது.
அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் உதவி கேட்டு அழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளை யில் தற்போது சிட்னியையும் புயல் பதம் பார்த்துள்ளது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்