மலேசியக் கப்பலும் கிரேக்கக் கப்பலும் மோதிக்கொண்டன

துவாசுக்கு அப்பால் சிங்கப்பூர் கடற்பகுதியில் ‘போலாரிஸ்’ எனும் மலேசிய அரசாங்கக் கப்பலும் ‘பிராயஸ்’ எனும் கிரேக்கக் கப்பலும் நேற்று பிற்பகல் 2.28 மணிக்கு மோதிக்கொண்டன என்று சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் கூறியது.
‘பிராயஸ்’ கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தனது அடுத்த துறைமுகமான தஞ்சோங் பெலபாசுக்குச் சென்றுகொண்டிருக்கையில் மோதல் நிகழ்ந்தது.
“சிங்கப்பூர் துறைமுக எல் லைக்குள் அங்கீகாரமில்லாத கப்பல்கள் இருப்பதால், அனைத்துலக கப்பல் சமூகத் துக்குத் தேவையில்லாத குழப் பம் ஏற்படும் என்றும் அது நமது கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு மிரட்டலை உண்டுபண்ணும்,” என்றும் ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.