1எம்டிபி: முன்னாள் பிரதமர்  நஜிப்பிடம் நாளை விசாரணை 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி தில்லுமுல்லு தொடர்பில் நாளை முதல் விசா ரணைக்கு உட்படுத்தப்படுவார். 
1எம்டிபி என்ற மலேசியாவின் அரசாங்க நிதியிலிருந்து நஜிப்பும் அவருடைய சகாக்களும் US$4.5 பில்லியன்  திருடி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 
1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் பிரிவான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) நஜிப்பின் சொந்த கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
இந்த வாரம் நடக்கும் விசாரணை இவ்விவகாரத்தில் ஒருமித்த கவனம் செலுத்தும்.
மலேசியாவின் புதிய அரசாங்கம் பழி வாங்குவதற்காக தங்கள் மீது வழக்குத் தொடுக் கிறது என்று நஜிப்பும் அவருடைய தற்காப்புக்குழுவும் தெரிவித்து வருகின்றன. 
 

PHOTO: AFP