சிறுமியின் திருமணத்தை தடுத்த மலேசிய போலிசார்

சிறுமியின் திருமணத்தை தடுத்த மலேசிய போலிசார்

1 mins read

கோலாலம்பூர்: பிராய், தாமான் சினான்ஜின் பகுதியில் 11 வயது சிறுமிக்கும் 21 வயது இளைஞருக்கும் நடக்கவிருந்த திருமணத்தை மலேசியப் போலிசார் தடுத்து நிறுத்தினர். தனியார் பள்ளி ஒன்றின் நிறுவனர் கே. சுதாகரன் அத்திருமணம் குறித்து போலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நடக்கவிருந்த திருமணத்தை போலிசார் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் கூறின. அச்சிறுமி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை எட்டும் வரை திருமணத்தை தள்ளிவைக்க அவ்விருவரும் சம்மதித்ததாகத் தெரிகிறது.