துருக்கியில் ஏழு மாடி கட்டடம்  இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை  21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். கட்டடம் இடிந்து விழுந்ததில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை துருக்கி நாட்டு அதிபர் ரசெப் ராயிப் எர்கோடர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.