ஐஎஸ் போராளிகளுடன் சிரியா படை கடும் சண்டை

கூட்டணிப் படை ஆதரவுடன் சிரியா படை, ஐஎஸ் போராளிகளை எதிர்த்து கடுமையாகச் சண்டையிட்டு வரும் வேளையில் சிரியாவில் உள்ள பிரெஞ்சு வீரர்களை பிரெஞ்சு தற்காப்பு அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லி (இடமிருந்து இரண்டாவது) சந்தித்துப் பேசினார். படம்: ஏஎஃப்பி   

டமாஸ்கஸ்: சிரியாவிலிருந்து  ஐஎஸ் போராளிகளை விரட்ட அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா படை இறுதிக் கட்டத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.  
  ஆனால் சிரியா படையை எதிர்த்து ஐஎஸ் போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வருவதாக எஸ்டிஎப் எனப்படும் சிரியா  ஜனநாயகப் படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி கூறினார்.
இது தங்களின் இறுதிக் கட்டத் தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிரியா மற்றும் ஈராக்கின்  பல பகுதிகள் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்தன. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்  படையின் ஆதரவுடன்  சிரியா படை அண்மைய மாதங்களில் சிரியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்டியடித்தது.  தற்போது ஈராக்கின் எல்லையை ஒட்டிய சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய பகுதி மட்டுமே போராளிகள் வசம் உள்ளது.
அப்பகுதியிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்ட இறுதிக் கட்டத் தாக்குதலைத் தொடங் கியுள்ள சிரியா படையினரை எதிர்த்து போராளிகள் கடுமை யாக சண்டையிட்டு வருவதாகவும் இருப்பினும் போராளிகள்  விரைவில் தோற்கடிக்கப்படுவர் என்றும் சிரியா படையின் பேச்சாளர் முஸ்தபா கூறியுள்ளார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி