பினாங்கு மேம்பாலத்திலிருந்து விழுந்த கார்; ஆடவர் மீது குற்றச்சாட்டு

மலேசியா: பினாங்கு மேம்பாலத்தில் கடந்த மாதம் 20 வயது சீன மாணவர் ஓட்டிய வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கடலில் விழுந்து ஓட்டுநர் உயிர் இழந்தார்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை உண்டாக்கியதற்கும் மரணம் விளைவித்ததற்கும் சிகை அலங்காரம் செய்பவரான எம்.வைத்தீஸ்வரன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அதிகபட்சமாக $20,000 (RM) அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

21 வயது வைத்தீஸ்வரன் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

 

படம்: மலேசியா கோப்பு படம்