தேர்தலில் இளவரசி போட்டியிட முடியாது  

பேங்காக்: தாய்லாந்தில் அடுத்த மாதம் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற் காக நடைபெறவுள்ள தேர்தலில் இளவரசி உபோல்ரத்தனா போட்டி யிட முடியாது என்று நேற்று நாட்டின் தேர்தல் ஆணையக்குழு அறிவித்தது. 
ஆணையம் நேற்று வெளியிட்ட அதிகாரத்துவ தேர்தல் வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் 67 வயது இளவரசி உபோல்ரத்தனா ராஜகன்யாவின் பெயர் இடம்பெற வில்லை.
வரும் மார்ச் 24ஆம் தேதியன்று தேர்தலில் போட்டியிடுவதற்காக இளவரசியின் பெயரை அறிவித்து இருந்தது தாய் ரக்ஷா சார்ட் கட்சி.
இதன் தொடர்பில் இளவரசி யின் சகோதரரும் நாட்டின் மன்னருமான வஜிரலொங்கோன், தம் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தார். 
அரச குடும்பத்தின் உறுப்பினர் கள் அரசியலுக்கும் மேலான சக்தி யாக இருந்து நடுநிலையுடன் இருக்கவேண்டுமே தவிர எந்த ஓர் அரசு பதவியையும் வகிக்கக் கூடாது என்று கூட்டத்தை அடுத்து வெளியிட்ட ஓர் அறிக் கைவழி ஆணையம் தெரிவித்தது. 
இந்தக் கூற்று சென்ற வெள்ளிக்கிழமை மன்னர் கூறிய கருத்தை  மறுபடியும் வலியுறுத்தி உள்ளது.
தாய் ரக்ஷா சார்ட் கட்சி மீது விசாரணை மேற்கொள்ளுமாறு தாய்லாந்து அரசியலமைப்பு பாதுகாப்புக் கழகத்தின் தலைமைச் செயலாளர் ஸ்ரீசுவான் ஜன்யா நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். படம்: இபிஏ