முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு எதிரான நீதிமன்ற விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச் சாட்டு விசாரணை ஒத்திவைக்கப் பட்டு உள்ளது. அந்த விசாரணை எப்போது நடக்கும் என்பதற்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை. 
1எம்டிபி என்ற அரசாங்க நிதியத்தைச் சேர்ந்த கோடானு கோடி பணம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளைத் திரு ரசாக் எதிர்நோக்குகிறார். அந்த விசா ரணை இன்று தொடங்குவதாக இருந்தது. 
ஆனால் நஜிப் செய்த ஒரு முறையீடு இன்னமும் நிலுவையில் இருப்பதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அவ ருடைய வழக்கறிஞர்களில் ஒரு வரான ஹர்விந்தர்ஜித் சிங் தெரி வித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. 
விசாரணைக்கான புதிய தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. 1எம்டிபி நிதியத்தைச் சேர்ந்த எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் என்ற அமைப்பிடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட் தொகையைத் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு திரு நஜிப் மாற்றி இருக்கிறார் என்று கூறப் படுகிறது. 
இதன் தொடர்பில் பல குற்றச் சாட்டுகளை அவர் எதிர்நோக்கு கிறார். இந்தக் குற்றச்சாட்டுகளின் படி திரு நஜிப் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 
இதனிடையே, நேற்று விசா ரணை தொடங்க இருந்ததற்கு முன்பாக நஜிப்பின் புதல்வியான திருவாட்டி நூர்யானா நஜ்வா நஜிப்,  ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். 
நஜிப், தன் வாழ்நாளிலேயே ஆகப்பெரிய சோதனையை எதிர் நோக்குகிறார் என்றும் இந்த நேரத் தில் அவருக்கு முழு ஆதரவை யும் ஒத்துழைப்பையும் தரும்படி அவர் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார். 
குற்றவாளிக் கூண்டில் தன் னந்தனியாக தனது தந்தை நிற் கும் ஒவ்வொரு வினாடியும் அவர் தனது குடும்பத்தையும் நண்பர் களையும் ஆதரவாளர்களையும் மக்களையும் பற்றிய சிந்தனை யோடுதான் இருப்பார் என்று தெரி வித்த அவர், “நீங்கள்தான் அவருக்குப் பலம், உறுதி.  
“உங்கள் கருணை உள்ளமும் ஊக்கமூட்டும் வார்த்தைகளும் மனப்பூர்வமான வழிபாடுகளுமே திரு நஜிப் இந்தப் புயலை வெற்றி கரமாகச் சந்திக்க உதவும்,” என்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்தார்.