நகைகளின் இருப்பிடத்தை ரோஸ்மா நிரூபிக்கவேண்டும்

பெட்டாலிங் ஜெயா: தன்னிடமிருந்து பெற்ற 44  நகைகளின் இருப்பிடத்தை மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் நிரூபிக்க வேண்டும் என்று லெபனானிய நகை நிறுவனம் ஒன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்ஏஎல் என்ற அந்த நகை நிறுவனத்தை வழக்கறிஞர் டேவிட் குருபாதம் பிரதிநிதிக்கிறார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் திரு நஜிப்புக்குச் சொந்தமான இடங்களில் மலேசிய போலிசார் அதிரடிச் சோதனை நடத்திய போது நகைகளை அவர்கள் பறிமுதல் செய்ததாக திருவாட்டி ரோஸ்மா தெரிவித்துள்ளதாக திரு டேவிட் கூறினார்.
ஆனால் இது ஒரு சிவில் வழக்கு என்றும் வழக்கை எதிர்நோக்கும் திருவாட்டி ரோஸ்மா நகைகளின் இருப் பிடத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் திரு டேவிட் குறிப் பிட்டார். நகைகளைப் பார்வை யிட அவரிடம் அவற்றை அனுப்பி வைத்ததாக நகை நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், அவரிடம் அனுப்பி வைக்கப்பட்ட நகை களைத் திருப்பி ஒப்படைக்குமாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று நிறுவனம் கேட்டுக்கொண்டது. அல்லது நகைகளுக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என்று அது கூறியிருந்தது. திருவாட்டி ரோஸ்மா தனது நீண்டகால வாடிக்கையாளர் என்றும் அவரது கோரிக்கைக்கு இணங்கி நகை களை அவரிடம் அனுப்பி வைத்த தாக நிறுவனம் தெரிவித்தது.
அனுப்பிவைக்கப்பட்ட நகை களைப் பார்த்த பிறகு அவற்றை அவர் வாங்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
நகைகளுக்கான பணத்தை அவரே செலுத்துவார் அல்லது இன்னொருவர் மூலம் செலுத் துவார் என்று நிறுவனம் குறிப் பிட்டது. நகை நிறுவனம் தமக்கு எதிராக தொடுத்துள்ள வழக் குக்கு எதிராக திருவாட்டி ரோஸ்மா இடைக்காலத் தடை பெற்றுள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்