பொருளியல் செயல் மன்றம்: தெளிவுபடுத்திய அமைச்சர் 

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் புதிய அமைச்சரவையின் செயல்பாடு  அந்நாட்டுப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மதுக்கு அதிருப்தியைத் தந்துள்ளதால் பொருளியல் செயல் மன்றம் அமைக்கப்பட்டிருப்பதாக பேச்சு நிலவி வருகிறது.
இதை மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி மறுத்துள்ளார்.
“பொருளியல் செயல் மன்றத்தில் நிபுணர்கள் பலர் இடம்பெறுகின்றனர். சமூதாயத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் உள்ளது. அவர்களது ஆலோசனை எங்களுக்கு முக்கியம்,” என்றார் திரு அஸ்மின் அலி.
16 உறுப்பினர்களைக் கொண்ட பொருளியல் செயல் மன்றத்தைப் பிரதமர் மகாதீர் நேற்று முன்தினம் அமைத்தார்.
மன்றத்தில் பிரதமர் மகாதீர், அமைச்சர்கள், வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் இடம்பெறு கின்றனர்.