நைஜீரிய அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 14 பேர் மரணம்

நைஜீரிய அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 14 பேர் மரணம்

1 mins read
5cf3d90b-4eeb-4aa6-aa7d-8ad354c62d6c
-

நைஜீரியாவில் வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் முகமது புகாரியின் தேர்தல் பிரசாரம் நேற்று நடைபெற்றது. அதில் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து மிதிபட்டுப் பலர் காயமுற்றதாகவும் சிலர் மரணமடைந்ததாகவும் அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிபரின் 'ஏபிசி' எனும் அனைத்து முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அச்சம்பவத்தில் மரணமுற்ற செய்தியை அறிவதாக அதிபர் புகாரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடோக்கி அமீசிமாகா அரங்கில் நடைபெற்ற பிரசாரத்தின் முடிவில், பூட்டப்பட்டிருந்த வெளிவாயிலுக்கு விரைந்த பொதுமக்கள் நெரிசலில் சிக்கித் தவித்ததாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா விளங்குகிறது.

எதிர்வரும் தேர்தலில் அதிபர் புகாரிக்கு எதிராக முன்னாள் துணை அதிபர் அடிகு அபுபக்கர் போட்டியிடுகிறார்.