தப்பவே முடியாத சிறையில் எல் சாபோவை அடைக்கலாம்

கொலோராடோ: போதைப் பொருள் கடத்தல் தொழில் நடத்தி வந்த ஜோகின் ‘எல் சாபோ’ கஸ்மனின் குற்றங்கள் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் உயர் உச்ச பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
மெக்சிகோவைச் சேர்ந்த ‘எல் சாபோ’, அமெரிக்காவிற் குள் போதைப்பொருள் கடத்தி வரும் தொழிலைப் பெரிய அளவில் செய்துவந்தவர். சினாலுவா கார்டெல் எனும் கடத்தல் கூட்டமைப்பின் தலை வரான 61 வயது ‘எல் சாபோ’, மெக்சிகோவின் உயர் பாது காப்புச் சிறைகளிலிருந்து இரு முறை தப்பினார். கடந்த 2016ஆம் ஆண்டு பிடிபட்ட அவர், 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டு கொலோராடோவின் ஃபுளோரன்ஸ் பகுதியில் உள்ள ‘ஏடிஎக்ஸ்’ எனும் உச்ச நிர்வாக மைய சிறைச்சாலை திறக்கப்பட் டதிலிருந்து அங்கிருந்து எவரும் இதுவரை தப்பியோடவில்லை. 
அமெரிக்க சிறைச்சாலைகளிலேயே இந்த வளாகம்தான் மிக பயங்கரமான கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக செயல்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்