‘மகாதீர் துரோகம் செய்துவிட்டார்’

ஈப்போ: மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி, பிரதமர் மகாதீர் 'துரோகம்' செய்துள்ளதாகப் பழி சுமத்தி உள்ளார்.
எதிர்க்கட்சியான அம்னோவி லிருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கூட் டணியில் இணைத்துக்கொண்ட தால், 'பிகேஆர்' கட்சியின் துணைத் தலைவர் சாங் கி காங் இவ்வாறு மகாதீரைச் சாடினார்.
அம்னோ கட்சியிலிருந்து ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வரும் உறுப்பினர் களை ஏற்கமாட்டேன் என்று சென்ற ஆண்டு மே மாதம் டாக்டர் மகாதீர் கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதியை அவர் அளித்து ஓர் ஆண்டிலேயே பின் வாங்கிவிட்டார் என்று திரு சாங் கூறியுள்ளார். அடுத்த பிரதமராகப் பதவி ஏற்கக் காத்திருக்கும் அன்வார் இப்ராஹிமின் கட்சியைச் சேர்ந்த சாங், முன்னாள் அமைச்சர் ஹம்சா ஸைனுதீன் உட்பட ஏழு அம்னோ நாடாளுமன்ற உறுப் பினர்களை மகாதீர் தமது கட்சியில் இணைத்துக்கொண்டது குறித்துக் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

எழுவரும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்தில் மூத்த பதவியில் இருந்து பணியாற்றினர் என்றும் சிலர் அமைச்சர், துணை அமைச்சர் பதவி வகித்தனர் என்றும் சுட்டினார் சாங்.
"அதிகாரம் இருந்தும் மக் களுக்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுக்காமல், ஊழல் நிறைந்த ஆட்சிக்குத் துணையாக இருந்தார்கள்," என்றார் அவர்.
இந்த எழுவரையும் இணைத் துக்கொள்வது கிராமப்புறங் களில் வாழும் மலாய் சமூகத்தின் ஆதரவை எவ்வகையிலும் வலுப் படுத்தாது என்றும் கிராம மக் களின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக் கும்போது பக்கத்தான் கட்சிக்கு ஆதரவு தானாக வரும் என்றும் அவர் சொன்னார்.

அத்துடன் தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கூட்டணியில் இணைய விரும்புவதை மறுக்கு மாறு பக்கத்தான் தலைமைத்துவத் தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!