‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2,000 ரூபாய் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது,” என்றார்.