அன்வார்: இரண்டு ஆண்டுகளில் நானே பிரதமர்

கோலாலம்பூர்: இரண்டு ஆண்டுகளுக்குள் பிரதமராகப் பதவி ஏற்க எதிர்பார்த்திருப்பதாக மலேசியாவின் முன்னையப் பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

“நிச்சயம் நான் ஐந்து ஆண்டுகள் காத்திருக்கப்போவதில்லை. ஈராண்டுகளுக்கு மேல் தாம் பிரதமராக இருக்கப் போவதில்லை என்று அவர் (டாக்டர் மகாதீர் முகம்மது) தெளிவாகக் கூறியுள்ளார்,” என்று  நியூயார்க் நகரில் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் திரு அன்வார் கூறினார்.

“ஆனால் நாம் இப்போது மிக சிரமமான, இக்கட்டான காலக்கட்டத்தில் இருப்பதால் அவரைத் திறம்பட ஆட்சி செய்ய அனுமதிப்பது முக்கியம்,” என்றார் அவர்.

1எம்டிபி சர்ச்சை தொடர்பில் 'கோல்மென் சேக்ஸ்' முதலீட்டு வங்கியுடனான பேச்சுவார்த்தைகளில் மலேசிய அரசாங்கம் பின்வாங்காது என்றும் திரு அன்வார் சூளுரைத்தார்.