இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள விலங்கியல் தோட்டம் ஒன்றில் மூன்று புலிகளுக்கு இடையிலான சண்டையில் ஒரு பெண் புலி உயிரிழந்தது.
ஷவ்ரி என்ற அந்த 13 வயது புலி, திறந்திருந்த கதவு ஒன்றின் வழியாகத் தனக்குப் பக்கத்திலுள்ள சுற்றடைப்புக்குள் சென்றபோது அதற்கும் அடைப்புக்குள் இருந்த இரண்டு புலிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. கூரிய நகங்களாலும் பற்களாலும் அந்த இரண்டு புலிகளும் ஷவ்ரியை அங்குமிங்கும் புரட்டிக் கடித்து கடுமையான காயங்களை விளைவித்தன.
சம்பவத்தின்போது 'லோங்லீட் சஃபாரி பார்க்' என்ற அந்த விலங்கியல் தோட்டம் அடைக்கப்பட்டிருந்தது. மற்ற இரண்டு புலிகளுக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
லண்டன் விலங்கியல் தோட்டத்தில் ஆண் புலியால் தாக்கப்பட்ட பெண் புலி ஒன்று உயிரிழந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.

