சீனா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீடிக்கும் வர்த்தகப் பூசலுக்குத் தீர்வு காண அவ்விரு நாடுகளின் அதிகாரிகள் பெய்ஜிங்கில் மீண்டும் பேச்சைத் தொடங்கியுள்ளனர். அந்த இரண்டு நாள் சந்திப்பில்  வர்த்தகப் பூசல் முடிவுக்குக் கொண்டுவர ஓர் உடன்பாடு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இரு நாடுகளும்  உடன்பாடு காண்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன.

 இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரி வசூலிப்பதற்கு தான் அறிவித்திருந்த காலக்கெடுவை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளார்.