கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை காப்பாற்றிய பங்ளாதேஷ்

டாக்கா: மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்யா அகதிகள் 43 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியதாக டாக்கா தகவல்கள் கூறின. மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி தங்களை கடத்தல்காரர்கள் கடத்தி வந்ததாக ரோஹிங்யா பெண்கள் பலர் கூறியுள்ளனர். போலிசாருக்கு முன்கூட்டியே கிடைத்த தகவலைத் தொடர்ந்து தென்கிழக்கு எல்லை வட்டாரத்தில் இரு இடங்களில் ரோஹிங்யா அகதிகளை போலிசார் கண்டு பிடித்தனர். ஒரு வாரத்தில் ரோஹிங்யா அகதிகள் சுமார்  100 பேரை பங்ளாதேஷ் போலிசார் காப்பாற்றியுள்ளனர். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்யா போராளிகளுக்கு எதிராக அந்நாட்டு  ராணுவம் ஒடுக்குமுறையை கையாண்டபோது ராணுவத் தாக்குதலுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்யா மக்கள் 740,000 பேர் பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்