பிரிட்டன் திரும்ப விரும்பும்  ஐஎஸ் குழுவில் சேர்ந்த பெண்

லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு கிழக்கு லண்டனிலிருந்து தப்பித்துச் சென்ற ஷமிமா என்ற சிறுமிக்கு தற்போது 19 வயதாகிறது.  தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண் தன் குழந்தையை வளர்க்க பிரிட்டன் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். சிரியாவில் அகதிகள் முகாமில் இருந்துவரும் அப்பெண் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது மற்ற இரு குழந்தைகள் இறந்து விட்டதாகக் கூறினார். லண்டனிலிருந்து  2015ஆம் ஆண்டு தப்பிச்சென்ற மூன்று சிறுமிகளில் ஒரு சிறுமி தாக்குதலில் இறந்துவிட்டதாகவும் அப்பெண் கூறினார். மற்றொரு சிறுமியைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் சொன்னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்