எல்லைச் சுவர் கட்ட டிரம்ப் அவசர நிலை பிரகடனம்; US$7 பில்லியன் வரை நிதி பெறக்கூடும்

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தன்னுடைய நாட்டிற்கும் மெக்சிகோவுக்கும் இடையில் இருக்கும் எல்லை நெடுகிலும் ஒரு சுவரைக் கட்டத் திட்டமிட்டு இருக்கிறார். 
இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்ட அவர் தனக்கு உள்ள தேசிய அவசரகால அதி காரங்களைப் பயன்படுத்தப் போகி றார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 
அந்தச் சுவரைக் கட்டுவதற் கான நிதியை ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்க வில்லை. நாடாளுமன்றத்தை மீறி எல்லைச் சுவருக்கான நிதியைப் பெற அதிபரின் அவசரநிலை பிரகடனம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் அவசரநிலை அறிவிப் பின் மூலம் அதிபர் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துகிறார் என்று மூத்த ஜன நாயகக் கட்சியினர் குறைகூறி வருகிறார்கள். 
குடியரசு கட்சியைச் சேர்ந்த சிலரும் கவலை தெரிவித்து இருக் கிறார்கள். அதிபர் டிரம்ப் தேர்தலில் கொடுத்த முக்கியமான வாக்குறு திகளில் இந்த எல்லைச் சுவரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை செலவின மசோதா ஒன்றில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த மசோதா மெக்சிகோ வுடன் கூடிய எல்லைச் சுவரைக் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கித் தருவதாக இல்லை. 
இருந்தாலும் அந்த மசோதா இரண்டு மாத காலமாக நீடித்து வந்த அரசாங்க முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வருவதாக இருக்கிறது.