சாபாவில் கால்பதிக்கும் பெர்சாத்து

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் பிரிபூமி பெர்சாத்து கட்சி சாபா மாநிலத்தில் கிளை பரப்புகிறது.
அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்கள் பலர் பெர்சாத்து கட் சியில் இணைய விருப்பம் தெரி வித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.
அந்த மாநிலத்தில் சாபா மரபு டைமைக் கட்சிக்கு (வாரிசான்) உள்ள செல்வாக்கைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இல்லாமல், அக்கட்சியில் சேர விரும்பாத அம்னோ முன்னாள் உறுப்பினர் களுக்கு அடைக்கலம் தரவே அங்கு தமது கட்சி கால்பதிப்பதாக திரு மகாதீர் விளக்கமளித்தார்.
“சாபாவில் வாரிசான் கட்சி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி யில் இல்லை. ஆனால், அங்கு பக்கத்தானைவிட வாரிசான் முன் னிலையில் இருக்கிறது. அதே நேரத்தில், மத்தியில் எங்களது கூட்டணியில் வாரிசான் இடம்பெற் றுள்ளது. அதன் சார்பில் மூன்று அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் உள்ளனர்.  இது மிகச் சிறந்த ஏற்பாடு,” என்ற அவர், கட்சியில் சேர விரும்பு வோரின் பின்னணியைத் தீர ஆராய்வோம் என்றும் சொன்னார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்