‘மலேசியாவின் மதிப்புமிக்க வர்த்தகப் பங்காளி சீனா’

மலேசியாவின் மதிப்புமிக்க வர்த் தகப் பங்காளியாக சீனா திகழ் கிறது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார்.
மலேசியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுட னான வர்த்தக உறவுகள் கட்டிக் காக்கப்படும் என்றும் சீனாவின் பெரும் முதலீட்டாளர்களை மலே சியா கவர்ந்து வருகிறது என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஏப்ரலில் அதிகார பூர்வ பயணமாக அவர் சீனா செல்லவுள்ளார்.  பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ பொருளியல் உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ்