மியன்மாரில் இருவருக்குத் தூக்கு

யங்கூன்: மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியின் ஆலோசகராக இருந்த திரு கோ நி என்ற வழக்கறிஞர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி யங்கூன் விமான நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற கியி லின் என்பவருக்கும் அக்கொலையைச் செய்யச் சொன்ன ஆங் வின் ஸா என்பவருக்கும் அந்நாட்டு நீதி மன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.