அமெரிக்கா-சீனா வர்த்தகப் பேச்சு

பெய்ஜிங்: அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வா‌ஷிங்டனில் தொடரவுள்ளதாகவும் அதில் இரு நாடுகளும் பரஸ்பரம் பலன்பெறும் வகையில் சுமுக முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் கடந்த வாரம் இரு முக்கிய அமெரிக்கப் பேராளர்களை ஸி ஜின்பிங் சந்தித்தார். அந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப் பட்டதால் அமெரிக்காவுடனான பொருளியல், வர்த்தகப் பூசல்களைத் தீர்க்க சீனா ஆர்வமாக உள்ளது என்று திரு ஜின்பிங் கூறியதாக ஸின்ஹுவா செய்தி தெரிவித்தது.