வெனிசுவேலாவிற்கு $135 மி. உதவி

கராக்கஸ்: அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் வெனிசுவேலா நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் $135 மில்லியன் நிதியுதவி வழங்க 25 நாடுகள் முன்வந்துள்ளன. அதிபர் நிக்கலஸ் மடுரோவும் எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவைடோவும் நாட்டைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடிப்படைத் தேவைகளுக்கே அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இடைக்கால அதிபராக திரு குவைடோ சுயபிரகடனம் செய்து கொண்டதை அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.