ஸ்பெயினில் திடீர் பொதுத் தேர்தல்

மட்ரிட்: வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ஸ்பெயினில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டுப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். கேட்டலோனியாவைத் தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. நான்காண்டுகளில் அங்கு நடக்கும் மூன்றாவது பொதுத் தேர்தல் இது. தாம் தாக்கல் செய்த வரைவு வரவுசெலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் திரு சான்செஸ் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. எட்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவர் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.