எல்லைச் சுவர் விவகாரத்தில் டிரம்ப் சட்டபூர்வமாக சந்திக்கக்கூடிய சவால்கள்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக் கும் மெக்சிகோவுக்கும் இடையே எல்லைச் சுவரைக் கட்டுவதற்காக  அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தவிருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார். 
இதனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று தன்மீது வழக்கு தொடுக்கப்படும் என்பதை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத் தின்போது இந்தச் சுவரை எழுப் புவது ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றிருந்தது.  
இருப்பினும் டிரம்ப் தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துவதாக ஜனநாயகக் கட் சியினர் கூறியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றம் சுவரைக் கட்டுவதற்கான நிதியை ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து டிரம்ப் அவசரநிலையைப் பிரகடனப் படுத்தினார்.
சுவர் கட்டும் திட்டத்துடன் செலவின மசோதா ஒன்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதனால் ராணுவ கட்டுமானத் திட்டங்கள், போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான போராட் டம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கிட்டத்தட்ட 8 பில்லியன் அமெரிக்க டாலர் வரை டிரம்ப் எல்லைச் சுவர் திட்டத்திற் காகப் பயன்படுத்தலாம்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்ட சிறிது நேரத்திலேயே முதல் சட்ட நடவடிக்கை ‘பப்ளிக் சிடிசன்’ என்ற குழுவால் எடுக்கப் பட்டது. 

 

Loading...
Load next