வாக்குறுதிகள் நிறைவேறாததால் மக்கள் குறை கூறுகின்றனர் 

NSTP/MOHAMAD SHAHRIL BADRI SAALI

கோலாலம்பூர்: தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத நிலையில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங் கத்தை மக்கள் குறை கூறத் தொடங்கியுள்ளதாக பிரதமர் மகாதீர் முகம்மது (படம்) கூறி உள்ளார்.
நேற்று ‘டெமொகிரசி ஃபெஸ்ட் 2019’ என்ற நிகழ்ச்சியின்போது முக்கிய உரை நிகழ்த்திய அவர் இவ்வாறு பேசினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியிடமிருந்து ஆட் சியைக் கைப்பற்ற அப்போது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட பக்கத்தான் ஹரப்பான் பல வாக்குறுதிகளை வாரி இரைத்தது.
“இப்போது அந்த வாக்குறுதி களை அரசு நிறைவேற்றுகிறதா என்பதை நாடே உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 
“இருப்பினும் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில் நாம் உள்ளோம். அதனால் அரசாங்கத்தைக் குறை கூறுவது மீண்டும் தொடங்கி உள்ளது,” என்றார் டாக்டர் மகாதீர்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி