லயன் ஏர் விமானத்தில் பயணம் செய்த தேள்

பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் நன்கு சோதனை இடப்பட்டதாகவும் விமானம் புறப் படும் முன் அனைத்து சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் உறுதியளித்தார். லயன் ஏர் விமானத்தில் பயணப்பெட்டி வைக்கும் பகுதியில் ஊர்ந்து சென்ற தேள். படம்: இணையம்

ஜகார்த்தா: லயன் ஏர் விமானத்தில் சென்ற வியாழக் கிழமை அன்று பயணம் செய்தவர் களுக்கு தலைக்குமேல் ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந் தது. 
ரியாவ் தீவின் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தோனீசியாவின் பந்தென்னுக் குச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் பயணப் பெட்டி களை வைக்கும் பகுதி அருகே தேள் ஒன்று ஊர்ந்து சென்றது. 
விஷம் நிறைந்த தேள் எவ்வாறு விமானத்திற்குள் வந் தது என்று லயன் ஏர் விசாரணை நடத்தி வரு வதாக பேச்சாளர் நேற்று முன் தினம் தெரிவித்தார். 
தேள் தென்பட்டதை அறிந் ததும் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் உடனே அப்பகுதி யைச் சோதித்தனர். 
இருப்பினும் தேள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டதாக பேச்சாளர் கூறினார்.