தக்‌ஷின் தொடர்பிருந்தோரும் தேர்தலில் நிற்கத் தகுதி

பேங்காக்: முன்னாள் தலைவர் தக்‌ஷின் ‌ஷினவத்ராவுடனும் தற்போதைய பிரதமர் பிரயுட் சன்-ஒ-சவுடனும் தொடர்பிருந்த வேட்பாளர்கள் எதிர்வரும் மார்ச் 24ஆம் தேதியன்று நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் நிற்கத் தகுதிபெற்றனர்.
தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நாட்டின் முதல் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதில் 68 வேட் பாளர்கள் தகுதிபெற்றுள்ளதை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையக்குழு அறிவித்தது.
கட்சிகள் தங்கள் பிரதிநிதி களைப் பல வாரங்களுக்கு முன்பே தேர்வு செய்திருந்தாலும் வேட்பாளர்கள் ஆணையக்குழு வால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. தக்‌ஷினின் சகோதரியிட மிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பிரயுட், அடுத்த மாதத் தேர்தலில் போட்டியிடத் தகுதிபெற்றார். அத்துடன் முன்னாள் பிரதமர் அபிசிட் வெஜஜீவாவுடன் தக்‌ஷின் தொடர்பிலிருந்த பியு தாய் கட்சியைச் சேர்ந்த மூவரும் ஒப்புதல் பெற்றனர்.
தாய்லாந்து இளவரசி உபோல்ரத்தனாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்த தாய் ரக்ஷா சார்ட் கட்சியும் தக்‌ஷினுடன் தொடர்புள்ள மற் றும் ஓர் எதிர்க் கட்சி. 
இருப்பினும் இளவரசியைத் தேர்தல் ஆணையக் குழு வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் கட்சி வேறு யாரையும் தேர்தலில் நிற்க நியமிக்கவில்லை.
தக்‌ஷினுடன் தொடர்பிருக்கும் ‘வாய்ஸ் டிவி’ நிறுவனம் மீது இருந்த ஒளிபரப்புத் தடையும் 15 நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது.
நிறுவனம் ஒளிபரப்பிய இரு நிகழ்ச்சிகளில் குழப்பத்தையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தும் தகவல்கள் மக்களுக்குக் கூறப்பட்டதாக நாட்டின் தேசிய ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு ஆணையம் கூறியது.  
படம்: ராய்ட்டர்ஸ்