சவூதி பட்டத்து இளவரசரின்  சுற்றுப்பயணங்களில் தடை

இஸ்லாமாபாத்: சவூதி அரேபியா வின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் பல ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ள வேண்டியிருந்த பயணங்களை ஒரு நாள் தாமதித்துள்ளார். இதனால் இந்தோனீசியா, மலேசியா ஆகிய இரு தென் கிழக்காசிய நாடுகளுக்கும் செல் லும் பயணம் தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சுகள் கூறி உள்ளன.
இன்று பாகிஸ்தானில் தரை இறங்குகிற இளவரசர், முதலீடு தொடர்பில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திடவுள்ளார். 10 பி. அமெரிக்க டாலர் (S$14 பி.) மதிப்புடைய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றைத் தொடங்குவதும் அதில் அடங்கும். 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற் கொலைத் தாக்குதலில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந் ததைத் தொடர்ந்து இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்ற நிலை உச்சத்தில் இருக்கிறது.
இது தொடர்பில் புல்வாமா தாக்குதலுக்கு சவூதி இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரின் சுற்றுப்பயணத் தேதியில் மாற்றம் செய்யப்பட்ட தற்கு இது காரணமா என்பது உறுதியாகக் கூறப்படவில்லை. 
இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நாளை மறுநாள் இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்குச் செல்லவுள்ளார். 
அங்கு இளவரசர், பல இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங் களில் கையெழுத்திடவிருக்கிறார். அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுட னும் இருந்த உறவுகள் காஷோகி கொலை வழக்கு தொடர்பில் ஆட்டம் கண்டுள்ள நிலையில் சவூதி அரேபியா தன் கவனத்தைக் கிழக்கே உள்ள நாடுகளுக்குத் திருப்பியுள்ளது.