சீனா: கருத்திணக்கத்தை ஏற்று அமெரிக்கா செயல்பட வேண்டும்

மியூனிக்: அமெரிக்க-சீன பேச்சுவார்த்தையில் காணப்பட்ட கருத் திணக்கங்களை அமெரிக்கா நடைமுறைப்படுத்தும் என்று சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் யாங் ஜிச்சீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடு களுக்கு இடையிலான உறவு மேலும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மியூனிக் நகரில் நடைபெற்று வரும் 55வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீன, அமெரிக்க உறவு பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
“உலகம் வாய்ப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்கியுள் ளது. இந்த நிலையில் எல்லா நாடு களும் மற்ற நாடுகளுக்கு ஒத் துழைப்புகளை வழங்குவது அவ சியம்,” என்றார் அவர்.
சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் வெளியுறவு பிரிவின் இயக்குநருமான திரு யாங், “சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இரு தரப்பு ஒருங்கிணைப்பு, ஒத்து ழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாட்டின் உறவு இருக்க வேண்டும் என்பதை  ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே ஆக்ககரமான ஒத்து ழைப்பை மேம்படுத்துவதற்கு  முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இரு தரப்பிலும் எட்டப்பட்டுள்ள கருத்திணக்கத்தை சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இரு நாட்டின் உறவு பயணிக்க வேண்டிய பாதையை அது காட்டுகிறது என்றார்.
சீனா-அமெரிக்க அரசதந்திர உறவு ஏற்பட்டு இவ்வாண்டோடு 40 ஆண்டுகள் ஆகிறது.