பங்ளாதே‌ஷில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி

பங்ளாதே‌ஷில் நிகழ்ந்த தீ விபத்தில் 9 பேர் பலி

1 mins read
08bfc468-b928-4880-94ce-7b7e7f22da49
-

பங்ளாதேஷ் நாட்டில் ஏழை மக்கள் அதிகமானோர் வசிக்கும் குடிசைப் பகுதியில் நேற்று தீ மூண்டதில் 9 பேர் மாண்டனர். துறைமுக நகரமான சிட்ட காங்கில் பிற்பகல் 3.30 மணி யளவில் தீ மூண்டது. இதனால் மூங்கில், தகரம், தார்பாலின் போன்றவற்றால் கட்டப்பட்ட வீடுகள் மளமளவென எரிந்து நாசமாயின. "குறைந்தது 470 வீடுகள் தீயில் நாசமடைந்திருக்கலாம்," என்று உள்ளூர் போலிஸ் தலைவர் பிரணாப் சவுத்ரி சொன்னார். இதற்கு முன்பு குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீச் சம்பவங்களுக்கு நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சொத்து மேம்பாட்டாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற் போதைய விபத்துக்கான காரணம் தெரியவில்லை.