ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை ஏற்க ஹெதர் நாவர்ட் மறுப்பு

வா‌ஷிங்டன்: ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு ஹெதர் நாவர்ட் பெயரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் அந்தப் பதவிக்கு போட்டியிட தாம் விரும்பவில்லை என்று ஹெதர் நாவர்ட் கூறியுள்ளார். முன்னைய ஃபாக்ஸ் செய்தி வாசிப்பாளரான நாவர்ட், தமது குடும்ப நலன்களைக் கருத்தில்கொண்டு அப்பதவிக்குப் போட்டியிடுவதைத் தவிர்த்து விட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.